Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத் தலைவரை பெற்ற வீரத்தாய்க்கு, இரங்கல் மற்றும் புகழஞ்சலி கூட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஐயா நெடுமாறன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வைகோ அவர்கள் மறைந்த தாய்க்கு இரங்கல் கவிதையை வாசிக்க, ஐயா நெடுமாறன் அவர்கள் தாயார் பார்வதி அம்மாள் படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவரை தொடர்ந்து வைகோவும், மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மறைந்த தாய்க்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

வைகோ, காசியானந்தன், நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, உட்பட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மறைந்த தாய்க்கு வீரவணக்கம் செலுத்தினர்.

திரைப்பட நடிகர் சத்யராஜ், இயக்குனர் சேரன், அமீர் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியை ஒட்டி சாலை இருமருங்கிலும் கறுப்புக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.

0 Responses to வீரத்தாய்க்கு கண்ணீர் அஞ்சலி நெடுமாறன், வைகோ, நாம் தமிழர் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com