Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறியுள்ளனர்.

நாகப்பட்டினத்திலிருந்து மாலை மீன்பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் 16 படகுகளை சிறைப்பிடித்தனர்.

படகுகளில் இருந்த 106 மீனவர்களை கைது செய்து, இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். படித்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை கண்டித்து நாகை,காரைக்கால் மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இலங்கை தூதரகம் முன் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவருகிறது. மீனவர்களை விடுவிக்கக்கோரி துறைமுகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறது.

0 Responses to இன்று இலங்கை தூதரகம் முன் திமுக ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com