இதன் காரணதாக தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் தமது சொத்துக்களை இடமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் கனேடிய நீதிமன்றம் ஒன்று அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்து ஒன்றை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டுக்களை முன்வைக்க விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு சில ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்களும் ஒத்துழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to விடுதலைப் புலிகள் மீது விசமத்தனமான குற்றச்சாட்டு