Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான புதிய பிரித்தானியத் தூதுவராக கடந்த வாரம் கடமையேற்றுள்ள ஜோன் ரங்கின் வட தமிழீழம் செல்ல இருப்பதுடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்கும் செல்ல இருக்கின்றார்.

புதிதாகப் பதவியேற்றவுடன் இடம்பெறும் சம்பிரதாயபூர்வ நடவடிக்கை இதுவெனக் கூறப்பட்டாலும், முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீளக்குடியேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தவிர, விடுதலைப் புலிகளுக்களுக்கு உதவினார்கள் அல்லது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரில் 5,000 பேர் வரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எஞ்சியுள்ள 5,000 பேரைப் பார்வையிட தமக்கோ, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கோ அல்லது ஏனைய மனிதநேய அமைப்புக்களிற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என, பதவியில் இருந்து மாற்றலாகிச் செல்லும், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதேவேளை, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் அலெஸ்ரெயார் பேர்ட் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த போதிலும், சில காரணங்களால் அந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

0 Responses to புதிய பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரங்கின் முகாம்களிற்குச் செல்லவுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com