கொழும்புத்துறைமுகத்தின் டொக்யார்ட் பகுதியிலேயே இன்று நண்பகல் அளவில் குறித்த மர்ம வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனையடுத்து அப்பிரதேசம் எங்கும் பலத்த பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக டொக்யார்ட் பணியாளர்கள் பத்துப் போ் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் இதுவரை உயிரிழப்புகள் இல்லையென்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புத்துறைமுக மர்மவெடிப்புச் சம்பவம் காரணமாக காயமுற்ற பத்துப் போ் வரையானோர் தற்போதைக்கு கொழும்புத் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அதன் பணிப்பாளர் மருத்துவர் ஹெக்டர் வீரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.



0 Responses to கொழும்பு டொக்யார்ட் பகுதியில் மர்மவெடிப்புச் சம்பவம் - பத்துப் போ் காயம்