Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன என நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையால் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்று வரை கொலைகள் நின்றபாடில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களை கடத்தவும் தொடங்கி விட்டனர்.

இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழர்கள் பிழைப்பு நடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடாவடிகள் தொடர்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழர்களின் கடல் வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த ஒற்றுமையும், போராட்டமுமே மீனவர் படுகொலைகளையும் கடல் வளம் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் பகையை தூண்டுகிறது: இந்தியாவும் இலங்கையும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com