Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு செயற்படவில்லை என்று பிரதிப் போலீஸ் மா அதிபர் லத்திகா சரன் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியில் வைத்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே அவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்ற எச்சரிக்கை அண்மையில் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் லத்திகா சரண் இதைத் தெரிவித்தார். எனினும், வரப்போகும் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையைத் தமக்குச் சமர்ப்பிக்குமாறு தாம் போலீசைக் கேட்டுள்ளதாகவும், இவ்வறிக்கையில் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவசியமானவை எவை என்பன குறித்தும் குறிப்பிடுமாறு அவர் கேட்டுள்ளாராம்.

0 Responses to தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளே இல்லை: பிரதிப் போலீஸ் மா அதிபர் லத்திகா சரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com