Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய ஆட்சியதிகாரத்திலிருந்து விடுபட்டு விட்ட நாம் 78 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்பையே பின்பற்றி வருகின்றோம். இந்நிலையில் 1881இல் இயற்றப்பட்ட பிரித்தானிய இராணுவ சட்டத்தின் கீழேயே சரத் பொன்சேகா தண்டனை அனுபவிக்கின்றார்.

பிரித்தானிய சட்டம் மீண்டும் இங்கு அமுல்படுத்தப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். ஊடகங்கள் மீதும் அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் இல்லை. பொலிஸார் விசாரணைகளை நடத்துவதில்லை. இத்தகைய செயற்பாடானது நாட்டில் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகின்றது என்பதை உணர்ந்து நிற்கின்றது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 Responses to பிரித்தானியாவின் ராணுவ சட்டத்தின் கீழேயே பொன்சேகாவுக்குத் தண்டனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com