Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அவற்றில் ஒன்று யாழ். சுழிபுரம் மேற்குப் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சோ்ந்த குடும்பஸ்தரான முருகேசு சிவநேசன் (28) என்பவரின் சடலமே அது என இனம் காணப்பட்டுள்ளது.

அடுத்த சடலம் யாழ். கொக்குவில் தலையாளி கிழக்குப் பகுதியின் ஆளரவமற்ற பிரதேசமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அச்சடலம் கொக்குவில் பிரதேசவாசியான சிவசங்கர் என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரஸ்தாப நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமற் போன நிலையிலேயே நேற்று அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்கும் போது யாழ். பொலிசாரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இரண்டு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்தப்படவுள்ளன.

0 Responses to யாழ்ப்பாணத்தில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com