Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"தமிழ் இனத்தின் வரலாற்றை, தமிழர்களின் தனி அடையாளத்தை,தமிழர்களின் ஒப்பற்ற தலைவனை, எம் இனத்திற்காக கருவறையில் சுமந்து ஈன்றெடுத்த பேரன்னையே,உன் மரணச் செய்தி கேட்டு தமிழனமே இன்று கண்ணீர் விட்டு அழுகின்றது. தமிழீழ ராணுவத்தின் தோட்டாக்கள் முழங்க தமிழீழ அரச மரியாதையோட அடக்கம் செய்யப்பட வேண்டிய உன் பூவுடலை, இப்படி தனித்து விட்டு கதறுகின்றோம், வெட்கி தலை குனிகின்றோம்,தாயே எம்மை மன்னித்து விடு". என்று கரூர் மாவட்ட மதிமுக சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கரூர் பேருந்து நிலையம் முன்பு அமைக்கபட்டிருந்த தாயாரின் படத்திற்கு கரூர் மாவட்ட மதிமுக சார்பாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் மதிமுக-வை சேர்ந்த திரு பாலமுருகன்,கலையரசன்,ஈழபாரதி, ஜே.பி.செல்வம்,கல்யாணி பாஸ்கர் மற்றும் தமிழர் முன்னணியின் தோழர்கள் உட்பட பெருந்திரளானோர் திரண்டு அன்னையின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியின் இறுதியில் நாளை (21.2.2011) கரூர் நகரில் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கரூர் நகரின் பல முக்கிய வீதிமுனைகளில் மதிமுக, தமிழர் முன்னணி,மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பார்வதி அம்மாளின் திருவுருப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



0 Responses to அழுகின்றோம்..... வெட்கி தலை குனிகின்றோ​ம்..... எம்மை மன்னித்து விடு தாயே (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com