Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்த சுப.முத்துக்குமார் நேற்று இரவு புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இன்று மதியம் நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போதுதமிழ்நாட்டில் கூலிக்கொலையாளிகள் பெருகிவிட்டனர். சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது. முத்துக்குமார் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு.

இந்த கொலையை செய்தது யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். போலீஸ் உண்மையான கொலையாளிகளை பிடிக்கவேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் எங்களது நடவடிக்கை பற்றி ஆலோசிப்போம்.

முத்துக்குமாருக்கு படத்திறப்பு நாளில் எங்களின் எழுச்கூட்டம் நடைபெறும். இந்த சூழ்நிலையில் என்னால் அதிகம் பேசமுடியவில்லை என்று தெரிவித்தார்.

0 Responses to தமிழ்நாட்டில் கூலிக்கொலையாளிகள் பெருகிவிட்டனர்: சீமான் ஆவேசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com