Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதியும், தமிழ் மக்களைப் படுகொலை புரிந்த போர்க் குற்றவாளியுமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும என வலியுறுத்தி கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

வெலிகட்கடைச் சிறைச்சாலைப் பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

சீருடையில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டமை, மற்றும் ஆயுதக் கொள்வனவு போன்ற விடயங்களிற்காக சரத் பொன்சேகாவிற்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை இராணுவ நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கருத்துரைத்த சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, தனதது கணவனின் விடுதலைக்கா தொடர்ந்து பாடுபடுவேன் எனக் கூறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதேபோன்றதொரு ஆர்ப்பாட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியபோது அதன் மீது காடையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

0 Responses to பொன்சோகாவின் விடுதலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com