Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் காலங்களில் தூக்கிப் பிடிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையளவில் இணங்கியுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போதே அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் போலியானவை என்று வலியுறுத்தியுள்ள அரச தரப்பானது, அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன் வைக்கப்படும் பட்சத்தில் வடக்கு மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களை அது தாமதப்படுத்தி விடும் என்றும் அரசாங்கத்தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி வரும் காலங்களில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன் வைக்காது தவிர்ந்து கொள்வதாக கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி இன்றைய திவயின பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

0 Responses to போர்க்குற்றங்களை எதிர்வரும் காலங்களில் நாங்கள் தூக்கிப் பிடிக்கபோவதில்லை: த.தே.கூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com