விமானப்படை வட்டாரங்களின் தகவல்களின் பிரகாரம் விபத்துக்குள்ளான விமானங்களின் இன்றைய பெறுமதி பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று தெரிய வருகின்றது. இலங்கைப் பெறுமதியில் பல கோடி ரூபாவாகும்.
விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலினால் பிரஸ்தாப விமானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிபீர் விமானங்களை வெளிநாடுகள் கொள்வனவு செய்வதாயின் அதற்கு அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அனுமதி பெறப்படுவது முக்கியமானதாகும்.
அந்த வகையில் இஸ்ரேலிடமிருந்து இலங்கை, ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகள் மட்டுமே தற்போதைக்கு கிபீர் விமானங்களை கொள்வனவு செய்துள்ளன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மற்றும் தமிழர்களையும் தேடித்தாக்கியழிக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்கு கிபீர் விமானங்கள் பெரும் பங்காற்றியிருந்தன.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள, யக்கல பிரதேசத்தில் இரண்டு கிபிர் வானூர்திகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக வான்படைத் தளபதியினால் 5 பேர் கொண்ட விசாரணை குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஏயா வைஸ் மார்ஷல் கபில ஜயதிலக தலைமையிலான பிரஸ்தாப குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க இரண்டு வார காலங்கள் செல்லும் எனவும் வான்படைப் பேச்சாளர் குழுத்தளபதி; அன்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றைய அனர்த்தத்தில் பலியான வானூர்தி செலுத்துனர் லெப்டினன் மொனாத் பெரேராவின் பூதவுடல் தற்சமயம் அவிசாவளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூதவுடல் காலி கிதுலம்பிட்டியவில் உள்ள அவரின் பிறப்பிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈழத்தின் உயிர்களை பறித்த பறவை
பனை தெங்குகளின் தலை முறித்த குருவி
பாடை ஏறிய நாள்,பட்ட துயர் நின்றாடிலும்
வட்டிலில் சோறுல்லை எனினும்
கொட்டிலில் கொண்டவுறவு கொலையுற்றிறுந்தலும்
சற்று இன்பதில் இனித்ததுவே எம்முள்ளம்.
உயிர் குடித்தவன் தலை போனால் என்ன?
வேறெந்த உயிறும் சாகலையேன்று நிம்மதி,
எம்துயர் உனக்கு வேண்டம் சிங்களனே.