ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையானது தவறுகளைத் திருத்திக் கொள்ள பொருத்தமான வாய்ப்பை அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவிக்கின்றார்.ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் மனித இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்பதால் அவற்றை உரிய முறையில் விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையானது அரசாங்கத்தையோ அல்லது விடுதலைப் புலிகளையோ மட்டும் தனியாக குற்றம் சுமத்தவில்லை. இருதரப்பினர் மீதுமே நிபுணர்குழு அறிக்கை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதன் பிரகாரம் சர்வதேச மனித உரிமை விடயங்கள் மீறப்பட்டுள்ளமை தெளிவாகப் புலனாகின்றது.
அதன் காரணமாக இந்த அறிக்கையை சரிவரப் பயன்படுத்திக் கொண்டால் நாட்டினுள் ஜனநாயகம் மற்றும் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் சரிவர நிலைநாட்டக் கூடியதாக இருப்பதுடன் இனங்களுக்கிடையில் சமத்துவத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.



0 Responses to நிபுணர்குழு அறிக்கை தவறுகளைத் திருத்திக் கொள்ள பொருத்தமான வாய்ப்பு: சம்பந்தன்