Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசின் இன அழிப்பு அட்டூழியத்தால் படுகொலை செய்யப்பட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்தினை நீதியின் முன்னிறுத்தக் கோரியும் மே 18 அன்று ஸ்பெயின் தலைநகரம் மட்ரிட்டில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர்

எதிர்வரும் மே 18 அன்று உலக நாடுகளின் மூலை முடுக்குகள் எங்கும் கண்டன பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துவதற்கு
அணிதிரளுமாறு பல்வேறு அமைப்புக்களும் அழைப்பு விடுத்திருக்கிறது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இன அழிப்பு போரினால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு
அவர்களுடைய உடைமைகள் மற்றும் வாழ்விடங்கள் என்பன அழிக்கப்பட்டது .மேலும்
போர் முடிவடைந்து விடுதலை புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக கழிந்து விட்ட நிலையிலும் கூட இன்னமும் தமிழ் மக்கள் முகாம்கள் என்ற பெயரில் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் சிறைச்சாலைகளுக்குள்ளும் அடைக்கப்பட்டு உயிர் ஆபத்துடன் தங்கள் வாழ் நாட்களை கழித்து வருகின்றனர்

சிங்கள அரசாங்கத்தின் கொலை வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக 2009 மே 18 திகதி மட்டும் என்னில் அடங்காத தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில்
ஈவிரக்கம் இன்றி கொன்று குவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் தமது உடல் அவயங்களை இழந்து படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்
இந்த வேளையில் போரினால் உயிர் இழந்த நம் தமிழ் மக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கும் காலம் காலமாக தொடரும் இலங்கை அரசங்கங்களது
மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிப்பதற்கும் சிங்கள இனவாதிகளை நீதியின் முன் நிறுத்தக்கோரியும் ஸ்பெயின் தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கு
ஸ்பெயின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு விடுத்திருக்கும் அழைப்பின் பேரில்
இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி அந்த நாட்டின் தலைநகர் மாட்ரிட் இல் நடைபெற உள்ளது

0 Responses to மே 18 இன ஒழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள்வீர்! ஸ்பெயின் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழு (STCC)அறைகூவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com