Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை இது, இதைத் தடுக்கத் தான் 2009 பெப்ரவரி 4 ஆம் நாள் பாரிஸ் Little Jaffna தமிழ் வர்த்தகப் பெருமக்களால் முன் உதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும் போராட்டம் La Chappel, Gare de Nord பகுதிகள் வெறிச்சோடி இருக்க, தமிழர் வேலைக்குச் செல்லாது, பிள்ளைகள் பாடசாலையைப் புறக்கணித்து அந்த நாளைப் பகிஸ்கரித்து , பிரான்சில் என்றுமே ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றாகக் கூடியதைப் பார்க்காத இந்நாட்டு மக்களும், அரசும் அதிர்ச்சி அடையும் அளவிற்கு பாரிஸில் Ecole Militaire யில் அமைந்துள்ள Mur de la Paix பகுதியில் தமிழ் மக்கள் கூடி சிறீலங்கா அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்டினர். அன்று ஆரம்பித்த போராட்டம், தொடர்ந்து பல போராட்டங்களுக்கு பின் 58 நாட்கள் இரவு பகல் என்று பாராமல் தமிழர் எல்லோரும் ஒன்றாக கிளர்ந்து எழுந்தார்கள்.

அன்று இந்த உலகம் எம் போரரட்டத்தைப் பார்த்த பார்வையே வேறு, உலக அரசியலும், இந்தியா என்ற வடிவத்தில் எமக்குச் சதி செய்தது. இந்த அழிவைத் தடுக்க எம்மாலும் முடியவில்லை.

முள்ளிவாய்க்காலின் பின் பிரான்சு 2009யில் 1000 கட்டில் ஆஸ்பத்திரியையும், பிரெஞ்சு மருத்துவர்களையும் செட்டிகுளத்திற்கு அனுப்பியது, அந்த மருத்துவர்கள் போரின் உச்சத்தைக், கண்டார்கள். பான் கி மூன் சிறிலங்காவிற்கு பார்வையாளராக சென்றார்,

மே மாதம் 2009 ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை மையம் மூலமாக சிறிலங்காவில் நடந்த மனிதவுரிமை மீறலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தோல்வி,அன்று உலகம் வடக்குத் தெற்காக பிரித்தது,அடுத்தது ஐரோப்பிய ஒன்றியம் GSP+ என்ற விசேட வரிச் சலுகையை இரத்து செய்தும் சிறிலங்காவை அசைக்க முடியவில்லை,

ஜூன் 2010 பான் கி மூன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விசேட ஆய்வுக் குழுவை அமைத்து ஏப்ரல் 28 திகதி எமது வலிகள் நிறைந்த மாதமாகிய இந்தக் காலகட்டத்தில் அந்த அறிக்கையை அரசுகளிடமும் மக்களின் கையிலும் அளித்ததின் பின்னணியில் எமக்கு ஒரு செய்தியை இந்த உலகம் தந்துள்ளது.

இன்று உலக மக்கள் தமிழர்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் மீண்டும் ஒரு பாரிய போரரட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் வாழும் நாடுகளில் அந்நாட்டு அரசிற்கு நாம் எமது மக்களின் நீண்ட கால அமைதி வாழ்விற்கு முக்கிய தேவை என்ன என்று மீண்டும் சொல்ல வேண்டிய காலத்தில் நிற்கிறோம்.

முள்ளிவாய்க்கால் மே 18 ஆம் நாள் வருடத்தில் ஒரு நாள், அந்த நாளில் எமது இனத்தையே வேரோடு அழிக்க சிறிலங்கா முயற்சித்தது, சிறி லங்காவில் தமிழீழ மக்களை அடக்குமுறைக்குள் வைத்து அடக்கினாலும் , புலம்பெயர் நாடுகளில் அவர்களை சிறீலங்காவினால் அடக்க முடியாமல் இருக்கிறது.

இன்று பல வழிக் கதவுகள் திறந்து இருக்கும் நிலையில் எமது போராட்ட வலுவை அதிகரிக்க வேண்டிய காலமிது, அதற்கு மீண்டும் எமது வர்த்தகப் பெருமக்கள் வழிகாட்டியாகவும் அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக தொழிலாளர் சமூகம், இளைய சமுதாயத்தினர், மற்றும் எல்லோரும் அந்தத் தினத்தை முழுதின பகிஸ்கரிப்பாக, TOTAL BLACKOUT ஆக மாற்றுவோமேயானால் இந்த உலகத்தின் பார்வை எமது பக்கம் திரும்பும்.

மே 18 ஆம் நாள் வருடத்தில் ஒரு நாள், அந்த ஒரு நாள் உலகத் தமிழர் அனைவரும் அணிதிரண்டு எமது நியாயத்தை எடுத்துச் சொல்வோம்.

இதை உலகத்தில் இருக்கும் அத்தனை நாடுகளிலும் ஒரே நேரத்தில் இவ்வாறு செய்வோமேயானால் அதன் வலு, அதன் பலாபலன் அதிகம்.

இந்த நாளை தமிழர்களுக்கு இந்த உலகம் அநீதி இழைத்த நாளாக எடுத்துக் காட்ட தமிழ் மக்கள்

தமிழ் மக்களின் வர்த்தக நிறுவனங்கள் இந்த ஒரு நாளை முன்னிட்டு தமது நிறுவனங்களின் கதவடைத்து, இந்த ஒரு நாளை தமது வேலைத் தளங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து, மாணவர்கள் அன்று மாலை தமது பாடசாலை ஆசிரியர், அதிபர்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவத்தைக் கூறி, விடுமுறை கேட்டு, இந்நாட்டு அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இனிவரும் காலங்களில் இந்த உலகத்தில் இப்படியான அழிவுகள் நடைபெறக் கூடாது, தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்று உணர்த்தும் அளவுக்கு எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும், அதற்காக அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

இன்று ஐக்கிய நாடுகள் சபை போரக் குற்றத்திற்கான அறிக்கையை வெளியிட்டிருக்கும் நிலையில் அதை முன்னகர்த்தி, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டியது பாதிக்கப்பட்ட மக்களாகிய எமது கடமையாகும்.

தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு

1 Response to ஒரு இனம் கருவிலிருந்து விழித்தெழும் தேசிய நாள்! - "மே 18"

  1. இளமாறன் தமி்ழ் நாடு‍

    இது‍ போன்ற ஒன்று‍ கூடல் தமிழ் நாட்டிலும் நடத்த வேண்டும், அனைத்து‍ கட்சிகளும் தனி தனியாக கூட்டத்தை/போராட்டங்களை நடத்தாமல் ஒன்றினைந்து‍ நடத்த வேண்டும். நானும் இதி்ல் கலந்து‍ கொள்ள தயாராக இருக்கிறேன்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com