அந்த நாளில், வர்த்தக நிறுவனங்கள் தமது கடைகளை கதவடைப்பு செய்து, மாணவர்கள் மாலை பாடசாலை செல்லாமல், தொழிலாளர் சமுகம் தமது வேலைதளங்களில் ஒரு நாள் லீவு கேட்டு, பேரு, துருகி, குர்திஸ்தான் அமைப்புகள் வந்து தமது ஆதரவை தந்து, பசுமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், நகர பிதாக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்...
.... ஆதரவு செய்தி வழங்கி பிரான்சு நாட்டில் பல்லாயிரம் மக்கள் அமைதியாக சிறி லங்கா அரச பயங்கர வாதத்தினால் கொலை செய்யப்பட்ட தமது உறுவுகளின் படங்களை ஏந்தி வர, சிறி லங்கா அரசுன் இனவெறியாட்டத்தை எடுத்து காட்டும் பதாதைகளுடன் அணிவகுத்து செல்லும் மாபெரும் ஊர்வலமாக பரிசில் உள்ள மனித வுரிமை சதுக்கத்திற்கு மக்கள் அணிவகுத்தார்கள்.
நாம் இன்றும் உயிருடன் தான் இருக்கிறோம், எமது மக்களின் உரிமை போராட்டத்தை யாரும் அதன் கருவிலிருந்து அழித்து விட முடியாது என்று சிறி லங்கா அரசுக்கு சவால் விடும் தன்மை எம்மக்களிடையே காணப்பட்டது.
பாரிஸில் உள்ள மனித வுரிமை சதுக்கத்தில் தான் 10 டிசம்பர் 1948யில், 2ஆம் உலக போருக்கு பின் இன்னிமேல் இப்படியான படுகொலைகள் வேண்டாம் என்று 63 வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. எமது மக்களும் 63 வருடங்களாக எமது மக்களின் சுதந்திரதிற்;காக போராடி கொண்டிருகிறார்கள். இந்த மனித வுரிமை சாசனத்தில் எழுதப்பட்ட மனிதவுரிமை சட்டதிக்கு அமையவே எமது போரரட்டம் அமைத்துள்ளது. அந்த சாசனத்தில் ஒரு வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது, எந்த ஒரு இனமும் அடக்குமுறையில் இருந்து தாம் விடுதலை அடைய தேவை இருப்பின் ஆயுதம் ஏந்தி போராடலாம் என்று இருக்கிறது.
தமிழ் மக்கள் இன அடக்கு முறையின் உச்சகட்டத்திலேயே, மனிதவுரிமைக்கு சிறி லங்கா அரசும், இந்த உலகமும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நிலையில் தம் நிலம், மொழி, கலாச்சாரத்தை காக்க எமது உறவுகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். எந்த மனித வுரிமையை காக்க இந்த ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதோ அதே ஐக்கிய நாடுகள் சபை எமது போராட்டத்தின் அழிவுக்கும் எமது மக்களின் அழிவுக்கும் காரணமாக இருந்திருகிறார்கள்.
அதே ஐக்கிய நாடுகள் சபைதான் இந்த அழிவுக்கு பின் விசாரணை கமிஷன் வைத்து அறிக்கையும் விட்டு இருக்கிறார்கள், அந்த அடிபடையில் இதே மனிதவுரிமை சதுக்கத்தில் வைத்து எமது மக்கள் இதே உலகத்தில் இந்த மனித அழிவுகள் போதும், 2ஆம் உலக யுத்தத்தின் பின் மனித அழிவுகள் நின்று விட வில்லை தொடர்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை அரசுகள் பாதுகாப்பதை விட்டு விட்டு அந்த நாடுகளில் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியோடு பிரான்சு மே 18 நினைவுகள், அந்த வலிகளுடன், அந்த வலிகளை சுமந்து எமது மக்கள் விடுதலை அடையும் வரை தொடர்வோம் என்று செய்தியை இன்றைய நிகழ்வு கூறி நிற்கிறது.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு



0 Responses to மே 18! தமிழீழ மக்கள் வீழவில்லை - பிரான்சு