Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் போர் நிறைவடைந்ததாக இலங்கை அரசாங்கம் கூறி இரண்டு வருடங்களாகின்றன. எனினும் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய சுமார் ஒரு லட்சம் மக்கள் இன்னும் தமது வீடுகளுக்கு திரும்பவில்லை. இந்த தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 13 ஆம் திகதி வரையில் வவுனியா மெனிக்பாம் மற்றும் கொடிகாமம் இராமாவில் முகாம் ஆகியவற்றில் இருந்து 1139 பேர் அவர்களி;ன் சொந்த இடங்களான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் குடியேற்றப்பட்டனர்

இந்தநிலையில் வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 114, 561 குடும்பங்களை சேர்ந்த 373, 593 பேராகும்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்புக்காரியாலய தகவலின்படி, முகாம்களுக்கு வெளியே வாழும் இடம்பெயர்ந்த பலர் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 1758 பேர் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் 13 மே 2011 வரை, யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா என்ற அடிப்படையில் இன்னும் 117,888 பேர் போரின் பின்னர் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

0 Responses to 2 வருடங்கள்: ஒரு லட்சம் மக்கள் சொந்த இடம் திரும்பவில்லை! ஐ.நா. புதிய அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com