போரின் போது தமக்கு கீழ் பணியாற்றிய படைவீரர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவன் என்ற வகையில் தாம் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்க தயாராவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கே தாம் பதிலளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒஸாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டமை குறித்து கருத்துரைத்த அவர், மிகவும் நேர்த்தியான படை நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்திருந்த சரத் பொன்சேகா, தமது தலைமையின் கீழ் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. எனினும் போர்க்குற்றம் தொடர்பில் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் வன்னியின் இறுதியுத்தத்தின் போது சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பான் கீ மூனின் நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.



0 Responses to ஐ.நா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க தயார்: சரத்