Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“உயிரைக் காப்போம் - இன அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட குருதிக் கொடை.

இறுதிப் போரின் கடைசி நாட்களில் சிங்கள இனவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நினைவுபடுத்தும் இரண்டாம ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக, கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் கனடிய குருதிக் கொடை நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்று மிசிசாகாவில் நடைபெற்றது.

“உயிரைக் காப்போம் - இன அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” எனும் பொருளட்பட நடத்தப்பட்ட இக்குருதிக்கொடை நிகழ்வில் இன, வயது வேறுபாடின்றி பலரும் கலந்துகொண்டனர். மிசிசாகா நகரில் அமைந்துள்ள ‘Square One Shopping Centre‘ இல் இந்நிகழ்வு நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை, மே மாதம் 28ஆம் திகதியன்று நடைபெற்ற இந்நிகழ்வில், சிங்கள இனவாத அரசின் இனவழிப்பு நடவடிக்கையைச் சுட்டிக்காட்டியதுடன், உலகின் எப்பாகத்தில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டாலும் அதனை அனைத்து மக்களும் கண்டிக்க வேண்டும் என்னும் செய்தியும் இதன் ஏற்பாட்டாளர்களால் எடுத்துச் சொல்லப்பட்டது.




0 Responses to “உயிரைக் காப்போம் - இன அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட குருதிக் கொடை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com