குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி, தற்போது அரசாங்கத்தின் பிடியில் இருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வப்போது சில நேர்காணலையும், யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்வதையும், மீதி நேரத்தில் கொத்துரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, நெரடோ அமைப்பைப்பற்றி அரட்டை அடிப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் கே.பி தற்போது இந்திய (தொல்லை) இல்லை தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் திராவிடக் கழகம், மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவே தேசிய தலைவர் பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலைசெய்ய உத்தரவிட்டதாக கே.பி தெரிவித்துள்ளார்.
கொள்கை அளவிலும், மற்றும் மதரீதியாவும் அவர் திராவிடக் கட்சிகளின் பால் ஈர்க்கப்பட்டதாக கே.பி பிதற்றியுள்ளார். நடந்து முடிந்த தமிழ் நாடு தேர்தலில் தோல்வி, அதனைத் தொடர்ந்து கனிமொழி கைது, என தொடர் தொல்லையில் கலைஞர் டெல்லிக்கும், சென்னைக்கும் பறந்து பறந்து கைதிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்தக் கொசுவின் தொல்லைவேறு தாங்கமுடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு கே.பி பிதற்றல் அமைந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால், தி.மு.காவும் பிரபாகரனும் இணைந்தே இக்கொலையைச் செய்தனர் என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கியாக உள்ளது. இந்திய தொலைக்காட்சிகளுக்கு பரபரப்புத் தேவை, அவை கே.பியை பேட்டி கண்டனர், கே.பிக்கோ பிரபலம் பிடிக்கும், நேர்காணல் வழங்கினார், ஆனால் சயிக்கிள் காப்பில் என்னை ஏன் இதற்குள் இழுக்கவேண்டும் என்று கருணாநிதி புலம்புவார். முன்போல இருந்திருந்தால், வசைபாடி அதனை ஒரு சசுற்றறிக்கையாக தமிழ் நாடு தலைமைச் செயலக முத்திரையோடு வெளியிட்டிருப்பார், பாவம் இப்பதான் அந்த பேப்பர் பாட் அவர் கையில் இல்லையே...
அதிர்வு



0 Responses to ராஜீவைக் கொலைசெய்ய தி.மு.க காரணமாம்: பிதற்றும் கே.பி!