Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுரும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுர்ச்சியுடன் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மே-12ம் நாள் முதல் மே-18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக முன்னெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

மே-15 பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. லண்டன் Greenford- லண்டன் புறநகர் பகுதியான gloucestershire பகுதியிலும் இடம்பெற்றிருந்தது.

gloucestershire பகுதியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அமைச்சர் டிலக்சன் மொறிஸ் - Chelteneham பாராளுமன்ற உறுப்பினர் Martin Harward கையொப்பத்துடன் கையெழுத்துப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதேவேளை மே-15 ஜேர்மனியிலும் இரண்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன் தலைமையில் Hanovver பகுதியில் நினைவேந்தல் வணக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதி அமைச்சர் நடராஜா ராஜேந்திரா அவர்களின் முன்னெடுப்பில் Saarbrücken அம்மன் ஆலயத்தில் வணக்க வழிபாடும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பிரான்சில் துண்டுப்பிரசுர பரப்புரையும் - நினைவேந்தல் வணக்க நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

Villiers-le-Bel மற்றும் Marne-la-Jolie ஆகிய தமிழ் சோலைகளில் வணக்க நிகழ்வுகள் பிரதி அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் பங்களிப்புடன் இடம்பெற்றிருந்தது.

மனித உரிமைச் சதுக்கத்தில் துண்டுப்பிரசுர பரப்புரை மக்கள் பிரதிநிதி சுபா குருபரன் பங்கெடுப்பில் முனனெடுக்கப்பட்டது..

இவ்வாறு நினைவேந்தல் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சமவேளை ஐநாவுக்கு முன்னாலான ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to உணர்வெழுர்ச்சியுடன் நினைவேந்தல் வார நிகழ்வுகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com