Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமர் மிக்லொவ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாடு குறித்து பொருட்படுத்தாத நிலையிலும், ஐ.நா. வின் நிரந்தர மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை ஆலோசிக்காமலுமே நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் ஐ.நா சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையில் பிரயோகிக்கப்பட்டுள்ள மொழி குறித்து தான் ஆச்சரியமடைவதாக ரஸ்யத் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையில் வித்தியாசமான இரு பிரிவு மக்கள் உள்ளனர் என்ற கருத்தையா உருவாக்குகிறது என்று ரஸ்யத் தூதுவர் வினவியுள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பை மிகவும் ஒழுக்கமான அமைப்பு என்றும் சுதந்திரப் போராளிகள் என்றும் நிபுணர் குழு அறிக்கை வர்ணிக்கிறது என்றும் ரஸ்யத் தூது வர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது: ரஸ்யத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com