மனித உரிமைக்கூட்டத்தில் இலங்கையில் ஏற்பட்ட மனிதப் பேரழிவுகளுக்கு உரிய விசாரனைகள் வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்போது. எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காத போது பாகிஸ்தான் மட்டும் இலங்கை விவகாரம் முடிந்துபோன விடயம் என இலங்கையின் இனப்படுகொலைகள் போர்க்குற்றங்களுக்க ஆதராவாக குரல் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பல தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் பயிற்சி பெற்றுவருவதாக பல உலக உளவுத்துறைகள் தகவல் வழங்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரனைகள் என வந்தால் பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் எடுத்து வரும் முயற்சிகள் வெளிவந்துவிடும் என்பது மட்டுமல்ல பாகிஸ்தானின் கவலை தடைசெய்யப்பட்ட மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அப்பால் ஆயுதங்கள் விற்றது என பல உண்மைகள் வெளிவரும் என்பதே பாகிஸ்தானில் இந்த ஆதரவுக்கு முக்கிய காரணம்.
பாகிஸ்தானின் இச் செயற்பாடுகள் இந்தியாவுக்கு தெரியாமல் இருக்குமா என்பது சந்தேகமே தமிழீழ பிரச்சனையில் காங்கிரஸ் தனது குடும்ப நலனை கருத்தில் கொண்டே நோக்குகின்றதே அன்றி இந்தியாவில் நலனில் அக்கரை கொண்டு அல்ல என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
பாகிஸ்தானின் போக்கை இந்தியா எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றது?.



0 Responses to இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் - இந்தியா என்ன செய்யப்போகின்றது?