தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றிவாகை சூடி முதல்வராகப் போகும் செல்வி ஜெயலலிதாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பீடம் பாராட்டுஉலகில் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுங்கள். அதேபோல் உலகில் எந்த இடத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் உதவிகள் தேவைப்படுகின்றனவோ! அதை உடனே நிறைவேற்றுங்கள். இவ்வாறக உங்கள் முதல்வர் பதவியை நீங்கள் நற்காரியங்களுக்காக குரல் கொடுப்பதற்கும் ஆதரவு வழங்குவதற்கும் பயன்படுத்திய வண்ணம் நீஙகள் நீண்ட நாள் வாழ்ந்து எம்மை மகிழ்விக்க வேண்டும். அத்துடன் பெருஞ்சவால்களை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ள தங்களை உலகம் எங்கும் கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டுகின்றது”
இவ்வாறு தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி உலகத்தமிழ் பண்hபாட்டு இயக்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை. கணேசலிங்கமும் இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் ஆர் என். லோகேந்திரலிங்கமும் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய செல்வி ஜெயலலிதா அவகட்கு
தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் வெளியான தேர்தல் முடிவுகள் உங்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் ஏன் உலகத்தமிழர்களுக்:கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்த்pருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
எம்மைப் பொறுத்தளவில்டி தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து நினற தேர்தல் முடிவுகளே இவை. அத்துடன் அனைவருமே ஒரு மாற்றதை விரும்பினார்கள். பல ஆண்டு கால விரக்த்pயை விரட்டியடிக்க அவர்கள் முயன்று அதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
ஊழலும் ஒழுங்கீனமும் அத்தோடு இணைந்த குடும்ப ஆதிக்கமும்தான் இந்த மக்களை அவ்வாறு விரக்தியடையச் செய்தது என்றால் அது மிகையாகாது.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் அல்லது கோரிக்கைகள் எல்லாம் ஒரு பறத்தே ஓரமாக வைக்கப்பட்டிருக்க மறுபக்கத்தில் தங்கள் குடும்பம் மற்றும் பரம்பரை சார்ந்த நலன்களை கவனிக்கும் வகையில் செயற்பாடுகளும் அங்கே வெளிச்சமாகத் தெரிந்தன. ஆரசியல் பாதையில் பயணிப்பது என்பது மக்களுக்கு சேவை செய்வதே முதல் நோக்கமாக கொள்ளவேண்டியதொன்றாகும். ஆனால் அதற்கு மாறாக லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடி நிற்க அதற்கு நிவாரணங்கள் வழங்காமல் தங்கள் குடும்பத்தின் தொடர்ச்சியான தேவைகளை கவனிக்கும் பணிதான் அந்த அரசியல் பதவி மூலம் ஆற்றப்பட்டது என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. இதனால் தமிழ் நாட்டுமக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.
மறுபக்கத்தில் ஈழமக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஈழமக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் ஆற்றிய பணிகள் அல்லது பிரச்சாரங்கள் இந்த தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈழத்தமிழர்கள் சர்வதேச படைகளினால் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழ் நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருந்தாலும் மறைமுகமாக மத்திய ஆட்சியாளர்களின் கொடூரமான யுத்த பங்களிப்புக்கும் ஆதரவாக செயற்பட்டார்கள் என்பதை மக்கள் கண்டு கொண்டார்கள். இந்த வகையான பார்வைகள் தான் நேற்றைய தேர்தல் முடிவுகளில் பல மாற்றங்களையும் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு பலத்த “அடி”யையும் கொடுத்துள்ளன என்றால் மிகையாகாது.
ஆமாம் செல்வி ஜெயலலிதா அவர்களே !.. அடி வாங்கியவர்கள் தாங்கள் செய்த அநியாயங்களை எண்ணி வருந்தியபடி ஒரு புறத்தில் இருக்கட்டும். நீஙகள் உங்கள் பணிகளை ஆற்ற தயாராகுங்கள். உங்களுக்காக பல பணிகள் காத்திருக்கின்றன.
தமிழ் நாட்டு மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை வாழவையுங்கள். அவர்கள் உங்கள் தொடர்ந்து பதவியில் ஏற்றி வைத்து பூஜிப்பார்கள். இந்தியா என்ற உன்னதமான நாடு உலகின் கண்களுக்கு பல்வேறு வகைகளில் பிரகாசமாய்த் தெர்pகின்றது. இதனால் போட்டி நாடுகளின் எதிர்ப்புத் தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. அவ்வாறான எதிர்ப்புத் தன்மையை தணிக்க நீங்கள் மத்திய அரசோடு சேர்ந்து நின்று உலகு முன்னேற்றத்திற்காக குரல் கொடுங்கள்.
நமது ஈழத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். உலகின் கொடிய தாக்குதல்களுக்கு பலியானவர்கள் போது எஞ்சியிருப்பவர்கள் இன்னும் உயிர்களைக் கையில் பிடித்தவண்ணமே உள்ளார்கள். அவர்களின் மறுவாழ்வு என்பது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது. எனவே ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு சுபீட்சமான எதிர்காலம் தோன்ற தாங்கள் தங்கள் பதவி மூலம் தேவையான காரியங்களை ஆற்ற வேண்டும். இவ்வாறான பணிகளின் போது தாங்கள் ஆலோசனைகள் தேவைப்பட்டால் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் சார்ந்த மனித நேய அமைப்புக்கள் மற்றும் கலாச்சார அமைப்புக்கள் ஆகியவற்றின் உதவிகளை நாடலாம்.
இவ்வாறு பார்க்கையில் உங்கள் பதவியேற்பு என்பது உலகத்தமிழர்களின் எதிர்காலத்தை மாற்றி விடக்கூடிய ஒரு சக்தியாகவே கணிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் உங்களை முதல்வராக்கி தாங்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதைப்போலவே தாங்களும் தமிழ் நாட்டு மக்களினதும் உலகத் தமிழ் மக்களினதும் மனங்களில் என்றும் நிறைந்து நிறகும் வண்ணம் பணியாற்றி புகழ்பெறவேண்டும் என்று உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
இங்கனம்
தமிழர் பண்பாட்டுப் பணியிலுள்ள
துரை. கணேசலிங்கம் – செயலாளர் நாயகம். உ.த.ப. இயக்கம்
ஆர். என். லோகேந்திரலிங்கம். சர்வதேச ஊடகப் பொறுபபாளர். உ.த.ப. இயக்கம்



இளமாறன், இந்தியா
தற்போது நாடு கடந்த தமிழீழ அரசு இலங்கை அரசுக்கு எதிராக போர் குற்ற விசாரனையை துரித படுத்த ஐ.நா விடம் வலியுறுத்தும் பொருட்டு கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறது. இந்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐ.நாவை நோக்கி பேரணியை அடுத்து இந்த கையொப்பங்களை கையளிக்க இருக்கிறது. அதற்கான கையெழுத்து படிவங்களை பல நாடுகளில் இருந்து நா.க.த.ஈ அரசுக்கு அனுப்ப பட்டுவிட்டது. இருப்பினும், இவ் கையெழுத்து இயக்கத்தை இம்மாதம் இறுதி வரை தொடர்ந்து நடத்திய பின்பு, பெற்ற கையெழுத்து படிவங்களை, தமிழகத்தில் இவ்வியக்கத்தை (கையெழுத்து) தற்போது நடத்திக் கொண்டு இருக்கும் பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் திரு கொளத்தூர் மணி, நா.க.த.ஈ அரசின் தோழமை மையத்தின் பொருப்பாளர் திருமதி சரஸ்வதி இவர்களுக்கு அனுப்பலாம். கையெழுத்து படிவத்தை பெற எனது மின்னஞல் விலாசத்துக்கு ( illamaran3@gmail.com)எழுதி கேட்டால் அல்லது கொளத்தூர் மணியுடன் பேச: 94433 59666. மின்னஞ்சல்: kolathurmani@gmail.com. கையொப்ப படிவத்தில் உங்களால் முடிந்த கையெழுத்துக்களை பெற்று கீழ்கண்ட விலாசத்திற்க்கு அனுப்பவும்.
பேராசிரியர். சரசுவதி.
29,பத்திரிக்கையாளர் குடியிருப்பு,திருவள்ளுவர் நகர்,திருவான்மியூர் சென்னை- 41
044 24 51 28 57
உங்களால் முடிந்த அளவுக்கு கையெழுத்துகளை பெற்று அனுப்புங்கள், உடனே தொடர்பு கொள்ளுங்கள்.