தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச படையினர் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை தீவிரமாக உள்ளதாக கொழும்பு நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவுக்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை உள்ளார். ஜெனீவாவில் சிறீலங்கா தரப்பினர் மேற்கொண்ட உரைகளின் சுருக்கங்களை அவர் உடனடியாகவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் என்ன நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் அவர் பான் கீ மூனிடம் கேட்டுள்ளார்.
இவ்வாறான தீவிரமான போக்கை வேறு நாடுகள் தொடர்பிலும் அவர் மேற்கொள்வதில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தீவிரம்