Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தியதான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் தொடர்பிலான விடயங்கள், ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து வரும் நிலையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தியதான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்தும் போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
மே-18 தமிழீழ தேசிய துக்க நாளில், நியூயோர்க் உள்ள ஐ.நா அதிகாரிகளிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் குறித்தான, குறியீட்டுக் பத்திரம் கையளிக்கப்பட்டதாகவும், முழுமையான கையெழுத்துப் போராட்டக் கோவை உரிய தருணத்தில் ஐ.நாவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் எங்கும் இக் கையெழுத்துப் போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான உகண்டாவிலும் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

உகண்டாவில் வாழ்ந்து வருகின்ற, தமிழகத்துக்கு உறவுகளான விஜய் சுப்ரமணியம் - உஸ்மான் - சேதுமாறன் மற்றும் கிருஸ்ணன் ஆகியோர் இக்கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் ஆகியனவற்றுக்கு பொறுப்பான அரசியல், இராணுவ தலைவர்களை விசாரிக்க, சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநருக்கு பாரப்படுத்துமாறு, தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களுக்கு இந்த கையெழுத்துப் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com