தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சட்ட சபைக்கு வெளியே காங்கிரஸ் உறுப்பினர் விஜய தாரணி செய்தியாளர்களிடம்,
’’உன்னதமான தலைவர் ராஜீவ் காந்தியை படு கொலை செய்தவர்களின் தண்டனையை குறைப்பது நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது.
நீதிமன்றமும், சட்ட மன்றமும் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். நேற்று சட்ட சபையில் முதல்- அமைச்சர் இதில் தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
இன்று அவர்களின் தண்டனையை குறைக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது’’ என்று கூறினார்.



congress katchi aatkal ellam enna piravine theriyalecongress katchi aatkal ellam enna piravine theriyale