தீர்மானம், தடையாணையால் உண்ணாவிரதப் போராட்டத்தை
நிறுத்தி வைக்கிறோம்: தா. பாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு 8 வாரக் காலத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தடை ஆணையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
இந்த மூவருக்கு வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமும் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முன்மொழிய ஏகமனதாக நிறைவேறியுள்ளது.
இதனை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. தமிழக முதல்வருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூக்குத் தண்டணையை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைக்காக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி இதேக் கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழகம் தழுவிய உண்ணாவிரதம் நடத்துவது என்று முடிவெடுத்திருந்தோம்.
தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் நீதிமன்ற தடையாணை ஆகியவற்றால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தடை கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது: தா.பாண்டியன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
30 August 2011



0 Responses to உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தடை கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது: தா.பாண்டியன்