விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ’’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு அந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜனாதி பதிக்கு கடிதம் எழுதுகிறார்.
இதற்கு காரணம் இந்த பிரச்சினையை கருணாநிதி கையில் எடுத்துக்கொண்டார் என்பதே காரணம். கருணாநிதி கையில் எடுத்து விட்டால் வெற்றி காணாமல் விடமாட்டார்.
அதனால்தான் முதலமைச்சர் ஜெயலலிதா 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்’’ என்று பேசினார்.
தூக்கை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா ஏன் தீர்மானம் நிறைவேற்றினார்? - மு.க.ஸ்டாலின்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 August 2011



ayyo......... mudiyala da saamy....
appadi neenga mudikuratha iruntha neenga porai niruthi irukalame
தயவு செய்து அரசியல் லாபங்களை மறந்து அந்த மூன்று தமிழர்களுக்கும் நியாயமான நீதி கிடைக்க வீண் பேச்சை நிறுத்தி ஒன்றிணைந்து செயலில் இறங்குங்கள்.