பிரித்தானியாவில் உள்ள நோத்- ஹம்டன் என்னும் இடத்தில் உள்ள பெஸ்ட் வே (BESTWAY) காஷ் & கரி(cash & carry) வாணிப நிலையத்தில் 500,000 பவுன்சுகள் பெறுமதியான சிகரெட் பெட்டிகளையும் சுமார் 18,000 பெறுமதியான காசையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த தமிழர்களுக்கு நீதிமன்றம் கடும் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த வருடம் ஜனவரிமாதம் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. குறிப்பிட்ட இந்த வாணிப நிலையத்தின் பொறுப்பதிகாரியாக உள்ள தமிழர் ஒருவரும் மற்றும் அங்கே வேலைசெய்யும் "மாப் சார்" என்னும் ஒருவர் உட்பட 5வர் இக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வாணிப நிலையத்தை கொள்ளையிட சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அது முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆனால் அப்போது கொள்ளையிட வந்த அதே நபர்கள் திரும்பவும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் இக் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். இக் கொள்ளைச் சம்பவத்தில் 4 தமிழர்களும் மற்றும் மேலும் 1 வேற்றினத்தவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
சம்பவ தினமன்று ஆயுதங்களுடன் வந்த நபர்கள் காவலாளியை மிரட்ட மற்றைய நபர் உள்ளே புகுந்து சிகரெட்டுகளையும் 18,000 பவுன்ஸ் காசையும் கொள்ளையடித்துள்ளனர். அப்போது கடமையில் இருந்த தமிழ் மனேஜர் பொலிசாருக்கும் அறிவிக்காது, ஆபத்துக்கு அடிக்கும் மணியையும் அழுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றுமொரு பொறுப்பதிகாரியன மாப் சார் என்பவரும் பொலிசாருக்கு போன் செய்யாமல் மெளனமாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையடித்தவர்கள் CCTV கமராவையும் அதில் பதிவாகிய காணொளிகளையும் அகற்றாமல் சென்றுவிட்டதால் பொலிசாருக்கு துப்புத் துலக்கும் வாய்ப்பு மேலும் இலகுவாகியது. CCTV கமரா மூலம் பொறுப்பதிகாரிகள்(மனேஜர்) என்ன செய்தனர் என முதலில் கண்டு பிடித்த பொலிசார் பின்னர் கொள்ளையர்களையும் கண்டுபிடித்தனர்.
இதில் பெரும் அதிர்ச்சியான விடையம் என்னவென்றால் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 தமிழர்கள் இந்த வாணிப நிலையத்திற்கு வந்துபோகும் வாடிக்கையாளர் என்பதுதானாம். இவர்கள் அனைவரும் சேர்ந்தே இத் திட்டத்தைப் போட்டதாகப் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர். 6 பேர் அடங்கிய யூரிகள் அடங்கிய நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறியது.
இதனை அடுத்து குற்றவாளிகளுக்கு தலா 4 வருடங்கள் சிறை வழங்கப்பட்டுள்ளது அத்தோடு மேலும் ஒரு குற்றவாளிக்கு 6 வருடங்கள் சிறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சமூக இரகசியங்கள் காக்கப்படவேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட கொளையர்களின் பெயர்களை இங்கே பிரசுரிக்கவில்லை என்பதனையும் அறியத்தருகிறோம்.
(காணொளி இணைப்பு)
அதிர்வு
518,000 ஆயிரம் பவுன்ஸ் கொள்ளையிட்ட 4 லண்டன் தமிழர்கள் (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
07 September 2011



//இதனை அடுத்து குற்றவாளிகளுக்கு தலா 4 வருடங்கள் சிறை வழங்கப்பட்டுள்ளது அத்தோடு மேலும் ஒரு குற்றவாளிக்கு 6 வருடங்கள் சிறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சமூக இரகசியங்கள் காக்கப்படவேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட கொளையர்களின் பெயர்களை இங்கே பிரசுரிக்கவில்லை என்பதனையும் அறியத்தருகிறோம்.
//
ரொம்ப முக்கியம். தமிழினத்துக்கு தலைகுனிவு தேடித்தரும் அந்த நாய்களின் பெயர்களை வெளியிட்டால் நாய்களுக்கு நம்போன்றோர் தண்டனைக் கொடுத்தது போல் இருக்குமே.