Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாதத் தாக்குதல். இதை அரசு கடுமையாக கண்டிக்கிறது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து லோக்சபாவில் அறிக்கை ஒன்றை வாசித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே 5ம் எண் நுழைவாயிலில் இன்று காலை குண்டு வெடித்தது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி போலீஸார் முற்றுகையிட்டு தடயங்கள், ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல்தான். இதில் யார் ஈடுபட்டனர் என்பது இப்போதே சொல்ல முடியாது. விசாரணைக்குப் பின்னர்தான் இதுகுறித்துத் தெரிய வரும். யாராக இருந்தாலும், இந்த சம்பவத்திற்கு எந்தவிதத்திலும் நியாயபப்படுத்த முடியாது. இது கடும் கண்டனத்துக்குரியது.

நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.

நேரில் ஆய்வு

இதைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்த டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நேரில் சென்றார் ப.சிதம்பரம். அங்கு குண்டுவெடிப்பு நடந்த இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். காவல்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

காணொளி - அழுத்தவும்

0 Responses to டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதல்: ப.சிதம்பரம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com