Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தில் இருக்கும் தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்ப உதவும் ஒரு முறை உண்டியலாகும்.

வெளிநாடுகளில் உள்ள பல தமிழர் கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களூடான நாம் பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது. அதுவும் எமது நம்பிக்கைக்கு உரிய நபர்களூடாக அப் பணம் செல்வதால் தமிழர்கள் நிம்மதியாகவும், ஒரு நம்பிக்கையோடு தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்பிவருகின்றனர். ஆனால் அதற்கும் ஆப்புவைக்க இலங்கை அரசுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார் கே.பி. அதாவது வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகைப் பணம் நேரடியாகவே இலங்கைக்குள் வருவதாகவும், இதனால் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் அவர்கள் உறவுகளுக்கும் ஒரு நெருக்கம் இருப்பதாகவும் இதன் காரணமாகவே கடந்த தேர்த்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைத் முதலில் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியுள்ளார் கே.பி. ஆனால் இதற்குப் பின்னணி வேறாக உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உண்டியலூடாகவே மக்கள் பணத்தை அனுப்பி வருகின்றனர். ஆனால் கே.பி ஆரம்பித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு மக்கள் பண உதவி வழங்குவது இல்லை. இதனால் இலங்கைக்குள் செல்லும் பணம் வேறு ஆட்கள் மூலம் செல்வதை விட தன்னூடாகச் செல்லவேண்டும் என கே.பி நினைத்து, இவ்வாறான ஒரு ஐடியாவை அரசுக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது இனி வருங்காலத்தில் அரசாங்கமே உண்டியலைச் செய்யலாம் எனவும் அதனால் பாரிய அன்னிச் செலாவணி இலங்கை அரசுக்குக் கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளாராம்.

அதாவது இனி வருங்காலங்களில் வீடு வாங்க அல்லது நல்ல காரியங்களுக்கு என வெளிநாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பணம் அனுப்பினால், அதனை இலங்கை அரசூடாகவே ஊரில் உள்ளவர்கள் பெற்றுகொள்ள நேரிட்டால், அனுப்பியவர், மற்றும் பணம் பெற்றவர் என அனைவரது விபரங்களும் அரசிடம் இருக்கும். அதுமட்டுமல்லாது. இலங்கையில் பணம்பெற்றவர் வீட்டிற்கு இராணுவம் இரவில் சென்று பணத்தை இலகுவாகக் கொள்ளையடிக்கவும் இது ஏதுவாக அமையும். இதை எல்லாம் கணக்குப்போட்டு மகிந்தர் இனி இலங்கையில் உண்டியல் முறை இருக்கக்கூடாது எனவும் அதனை ஒழித்துக்கட்டவேண்டும் எனவும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

புலம்பெயர் தமிழர்கள் என்ன சளைத்தவர்களா இதற்கு ஒரு மாற்று முறை ஒன்றைக் கண்டு பிடிக்க எத்தனை நாட்கள் ஆகப்போகிறது என்று கேள்வி எழுப்புகிறார் லண்டன் வியாபாரி ஒருவர்.

அதிர்வு

0 Responses to கே.பியின் ஐடியா: உண்டியலுக்கு மகிந்த ஆப்புவைக்கிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com