ஜேர்மனி, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக செயல்பட்டு வந்த ஜெனரல் ஜகத் டயஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டு உள்ள்ளார் என ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.
இவர் வன்னி யுத்தத்தின்போது 57 ஆவது படைப் பிரிவின் தளபதியாக செயல்பட்டவர். போர்க் குற்றச்சாட்டுக்களின் எதிரொலியாகவே இவர் திருப்பி அழைக்கப்பட்டு உள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்களை இவர் வகை தொகை இன்றி கொன்று குவித்தார் மற்றும் சித்திரவதை செய்தார் என்று பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இவர் தொடர்பாக கடும் அதிருப்தியை கடந்த மாதம் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் நாட்டில் உள்ள தமிழ் இளையோர்கள் பலர் இவர்க்கு எதிராக பல வழக்குகளையும் பதிவுசெய்துள்ள நிலையில், சுவிஸ் அரசாங்கத்திடம் இருந்து டயஸ் தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதன் காரணமாகவே நிலமையைச் சமாளிக்க முடியாமல் டயசை இலங்கை அரசு மீளப்பெற்றுள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிர்வு
ஜெனரல் ஜகத் டயசின் தூதுவர் பதவி அம்பேலா? சுவிஸ் அரசாங்கம் கடும் விசனம்
பதிந்தவர்:
தம்பியன்
14 September 2011



0 Responses to ஜெனரல் ஜகத் டயசின் தூதுவர் பதவி அம்பேலா? சுவிஸ் அரசாங்கம் கடும் விசனம்