Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களே இலங்கை அரசுக்கு எதிராகவும் நாட்டிற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக அந்த நாட்டின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாமல் செய்து நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது சில சந்தர்ப்பவாத தமிழர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடம் போதியளவு பணம் காணப்படுகின்றது, அதனைக் கொண்டு நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். எதிர்காலத்திலும் நாட்டுக்கு எதிராக குறித்த புலம்பெயர் தமிழர்கள் பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடும்.

போரின் பின்னர், சமாதானம், அபிவிருத்தி மற்றும் மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்ற அச்சத்தினால் அவசரகாலச் சடட்ம் நீக்கப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கான அவசியமில்லை என ஆய்வுகளின் மூலம் தெரியவந்ததாகவும் அதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த சவாலை முறியடிக்க தயார். பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமெரிக்கர், இங்கிலாந்து போன்ற நாடுகளும் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. பிரபல சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 Response to புலம்பெயர் தமிழர்களே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்

  1. we need to get action to sri lankan goverment.............

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com