Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தை இலக்கு வைத்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்குடன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வன்னியில் இடம்பெற் இறுதிக் கட்டப் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரங்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்படித் தெரியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குகுழுவின் கூட்டத் தொடரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு மிகைப்படுத்திய தரவுகளை வெளியிட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், நியூயோர்க்கில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்துக்கு முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரப்புரைப் போரின் ஒரு பகுதியே இதுவென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிராக பிரசாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com