ஐ.நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுதந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?
இலவச பேரூந்து வண்டிகள்
உயிருள்ளவரை வாழ்க்கைதான் என வாழும் ஓர் அழிக்கப்படும் இனத்தின் உறவுகளே!
ஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுத்ந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?
சர்வதேச சமூகத்தை எம்பால் ஈர்க்கவேண்டிய தேவையை, அதன் முக்கியத்தை நன்கு அறிந்த நாம், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?
192 நாட்டுத் தலைவர்களுக்கு எமினத்துக்கு நடந்தவற்றை நினைவுபடுத்த, இப்போ நடப்பவற்றை எடுத்துக் கூற, எமது எதிர்காலத் தேவையை எடுத்தியம்ப, இதைவிட வேறொரு சந்தர்ப்பம் இப்படிக் கிடைக்குமா?
எமது எண்ணிக்கையே எமது பலம் என்பதை அறிந்துமா இந்தத் தயக்கமும், தாமதமும்.
இலவச பேரூந்து வண்டிகள் உங்களுக்காக, உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பொங்கு தமிழராய்ப் பொங்கியெழுவோம்! நியூயோர்க் நகரையே அதிரவைத்து ஜெனிவாவின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவோம்.
ராஜபக்ச போகாத ஜெனிவாவுக்கு வந்தோர் தொகை10,000.
அந்தக் குற்றவாளி வரும் ஐ நா முன் எத்தனை தமிழர்கள் வருகிறார்கள்?
தமிழர் கூட வாழும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை வகிக்கும் கனடாவின் சக்தியை, அதன் பலத்தை ராஜபக்சவுக்கும், உலகிற்கும் எடுத்துக் காட்டுவோம்.
தொடர்புகளுக்கு: 647 822 8062 - 416 291 7474 - 647 209 4100
கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர் நா. க.த. அ
sivalingham@sympatico.ca
உயிரைக் கொடுக்கும் உறவுகளுக்காக ஒரு நாளைக் கொடுப்பது கடினமா?
பதிந்தவர்:
ஈழப்பிரியா
21 September 2011



வாழ வேண்டிய இள படரொளிகளை நாசமாக்கிய கொடும் பாவி
நமக்கல்லாடிலும், இன்னமும் இந்த அரக்கர்களின் பிடியில் நசுக்கபட்டு,
வாய் கட்டி, வயிறு கட்டி, தம் உரிமைகளை இழந்து,
பார்க்க கூடாத, அநுபவிக்க முடியாத துயரங்களையும்,சுமக்க முடியாத சுமைகளை
தாங்கி நிற்கும் எங்கள் உறவுகளுக்கு,பொங்கு தமிழராய்ப் பொங்கியெழுவோம்!
அவர்களுக்கும், உறவுகள் இழந்த எல்லோருக்குமாக, சேர்ந்து நில்லுங்கள் உறவாக,
பெருமையடன் - பேரணியாக ! வாழ்க நம் பூமி, வளர்க நம் மக்கள் !!!