Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ரொபேட் ஓ பிளேக் இன்று யாழ் சென்றிருந்தார். அங்கே அவர் பல்கலைக்கழக மாணவர்களை இன்று சந்திக்க ஏற்பாடிகியிருந்தது. இருப்பினும் அதனைத் தடுக்குமுகமாக யாழில் ஈ.பி.டி.பி கூலிப்படையினர் ஒரு போராட்டத்தை அறிவித்து அவரது வாகனம் செல்லும்பாதையை முடக்கியுள்ளனர். கூலிக்கு மாரடிக்கும் சில காவாலிகளை அழைத்துவந்து இப் போராட்டத்தை நடத்திய ஈ.பி.டி.பியினர் யாழ் பெண்களைப் பற்றி ரொபேட் ஓ பிளேக் தரக்குறைவாகப் பேசியகாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க சுமார் 40 நிமிடங்கள் தாமதித்ததாக அறியப்படுகிறது. ஆனால் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பரவாயில்லை தாம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த பின்னரே செல்வேன் என கண்டிப்பாக கூறிவிடார் ரொபேட் ஓ பிளேக். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர் எனவும் பின்னர் மாணவர்களை ரொபேட் ஓ பிளேக் சந்தித்தார் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில ஈ.பி.டி.பி கூலிப்படையினர் ரொபேட் ஓ பிளேக் 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வைத்து யாழ் பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார் என்று சிங்கள ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளனர். ஊடகவியலாளர் ஒருவர் ரொபேட் ஓ பிளேக் எந்த ஊடகத்துக்கு அப்படிச் சொன்னார் என்று கேட்டபோது கூட்டத்தில் நின்ற கூலிப்படையினர் எவருக்குமே அகு குறித்து தெரியாதாம். மண்டையைச் சொறிந்தவாறு நாங்கள் கேள்விப்பட்டோம் அவ்வளவுதான் என்றார்களாம். ஈ.பி.டி.பி கூலிப்படையினருக்கு அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என்று கேட்டாலே தெரியாது, அதிலும் ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவில் தெரிவித்தார் என்று கூறுவது கொஞ்சம் ஓவரா இல்லையா?

1984ம் ஆண்டு காசுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த அலன் தம்பதியினரை கடத்தியது இந்த ஈ.பி.டி.பியினர் தான் என்பதனை எவரும் மறந்துவிடவில்லை.

0 Responses to ரொபேட் பிளேக்கை மறித்து ஈ.பி.டி.பியினர் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com