Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி. தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த கூட்டுப் யிற்சியை கைவிட ண்டும் என்றும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று இலங்கையுடனான உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த கட்சி கோரியுள்ளது.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது

இதன் காரணமாக இலங்கைக்கடற்படையினரால் 540 தமிழக மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று கட்சியின் நிறுவுநர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை கொன்றமைக்காக இலங்கை கடற்படையினருக்கு இந்தியா வழங்கும் பரிசாகவே இந்த கடற்படை கூட்டுப்பயிற்சியை தமிழக மக்கள் பார்ப்பதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை திருகோணமலைக்கு அப்பால் கடற்பகுதியில் ஆரம்பி;க்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

0 Responses to தமிழக மீனவர்களை கொன்றமைக்காக இந்தியா, இலங்கைக்கு பரிசளித்துள்ளது: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com