Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

0 Responses to காந்தியடிகள் பிறந்தநாளில் தமிழகமெங்கும் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com