Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் தங்கியுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரிய வருகிறது.

கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்தவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com