Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்காக வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ச அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடயமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு கற்பழிக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

அமெரிக்க அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.

அமெரிக்காவில் தீவிரமாக தமிழர் துயர் துடைக்க இயங்கும் எமது அமைப்பின் கணிப்பின் படி அமெரிக்க மக்களும் அரச அதிகாரிகளும் எமக்கு நடந்த படுகொலையை சனல்4 மூலம் பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்கள்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு ஏதாவது திடமான நடவடிக்கை எடுப்பதற்கே அமெரிக்கா அதிகாரிகள் விரும்புகின்றார்கள்.

அதற்கு முதல்படியாக ராஜபக்ச ஆட்சியினரை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற ஆர்வமாக உள்ளார்கள்.

உங்கள் அமெரிக்க வருகை இந்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர குந்தகம் விளைவிக்கக்கூடாது.

பூட்டிய அறைக்குள் நடக்கும் கூட்டங்களில் தமிழர் அபிலாசைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக்கூடாது.

உங்களுக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கோட்டை விட்டு விடவேண்டாம் எனவும் வேண்டுகின்றார்கள்.

முள்ளிவாய்கால் அவலத்தின் பின் வென்றெடுத்த முக்கிய ஆதரவுகளை உங்கள் நடவடிக்கை மூலம் பாழடிக்க வேண்டாம் என்றும் இந்த அமைப்பு வேண்டுகின்றது.

அமெரிக்க அதிகாரிகள் பலர் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

உங்கள் வரவு தமிழ் இனத்தின் நிரந்தர விடுதலைக்கு போடும் ஒரு அத்திவாரக் கல்லாக இருக்கவேண்டுமே தவிர, அடகு வைக்கும் பயணமாக இருக்கக் கூடாது எனவும், ஒபாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் வைக்கின்றது.

தொடர்புகளுக்கு: (617) 765-4394
இணையத்தளம்: www.tamilsforobama.com

0 Responses to கூட்டமைப்பு அமெரிக்காவிடம் போர்க்குற்றவியலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com