Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பல பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெறுவோம். அன்று ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. இன்று ஆட்சி செய்யும் தகுதியை இழந்தது.

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஓட்டு எண்ணிக்கை நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். சட்டமன்ற தேர்தலின்போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி யிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியது.

ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இப்போது உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா அன்றும், இன்றும் சுய பலத்தில் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள்தான் பெரிய கட்சிகள் என்று இளங்கோவன் கூறியிருக்கிறார்.

இது உண்மைதானா? என்பது தேர்தலுக்கு பின்னர் தெரிந்துவிடும். தே.மு.தி.க. மிகப்பெரிய சக்தியாக வரமுடியாது. அ.தி.மு.க., தி.மு.க. மக்களால் ஓரம் கட்டும் சூழ்நிலை வரும். அந்த சூழலில் மூழ்கும் நிலை தே.மு.தி.க.வுக்கும் அமையும்.

கூட்டணி சேரமாட்டோம் என்று கூறி வந்தார்கள். கட்சி காணாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தார்கள்.

இன்று கழற்றி விடப்பட்டதால் தேர்தலில் தனித்து நின்றால் சுயரூபம் தெரிந்துவிடும் என்ற அச்சத்துடன் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் உறவு வைத்து கொண்டு தப்பிக்க முயல்கிறது’’என்று கூறினார்.

0 Responses to தேமுதிக பெரிய சக்தியாக வர முடியாது; மூழ்கும் நிலை அமையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com