Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நியாயமான விசாரணை தேவை என்று சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரட்டுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் சாலில் செட்டி விடுத்துள்ளார்.

போர் குற்றம் தொடர்பில் இலங்கை சுயமான விசாரணையை மேற்கொண்டு வருவது வெட்க்கத்தனமான செயல் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன விசாரணைக்காக நீண்ட நாள் காத்திருந்த நிலையில் தற்போது சர்வதேச சுதந்திர விசாரணைக்கான நேரம் வந்துள்ளதாக செட்டி கருத்துரைத்துள்ளார்.

இந்தநிலையில் தமது கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க கெவின் ரட் உடன்பட்டதாகவும் செட்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து எதனையும் கூறமுடியாது என இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லச்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com