பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதே பாணியைதான் கடைப்பிடித்தார். எனவே தமிழக அரசு கடுமையான நிலைப்பாடு எடுத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூட வேண்டும் என மீண்டும் அப்பகுதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மாநில அரசு தலையிட்டு அனுமின் நிலைய பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று கூறினார்.
ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும்: ராமதாஸ்
பதிந்தவர்:
Anonymous
12 October 2011



0 Responses to ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும்: ராமதாஸ்