Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்பிருந்த திமுக ஆட்சியாளர்கள் மக்களைப்பற்றி கவலைப்பட்டதில்லை, தங்கள் குடும்பத்தைப் பற்றியே கவலைப்பட்டனர் என்று நடிகர் தியாகு பேசினார்.

நீண்ட காலம் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் தியாகு. சில தினங்களுக்கு முன்னர், கட்சித் தலைமையின் போக்கு பிடிக்காமல் திடீரென தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சென்னையில் பிரசாரம் செய்த அவர், அப்போது இவ்வாறு பேசினார்.

உள்ளாட்சித் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. முதல்வர் அறிவித்த திட்டங்கள் ஏழைகளுக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காக, நல்ல மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்.

இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தைப் பற்றியும்தான் கவலைப்பட்டார்கள்.

இதனால் தமிழக மக்கள் பெரும் தொல்லைகளை அனுபவித்தார்கள். தற்போது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில்தான் சாதாரண அடிமட்டத் தொண்டனுக்கும் மரியாதை உள்ளது. அவர்களுக்கு உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் ஜெயலலிதா என்று பேசினார் தியாகு.

0 Responses to திமுக ஆட்சியாளர்கள் மக்களைப்பற்றி கவலைப்பட்டதில்லை: தியாகு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com