Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தான் கடத்தப்பட்ட சம்பவத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடத்தப்பட்டு விடுதலையான யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவன் வேதரணியம் லத்தீஸ் தெரிவித்துள்ளார். தான் கடத்தப்பட்டுது உண்மை எனக்கூறிய அவர், யார் கடத்தினார்கள் என்பது தெரியாது எனவும் இராணுவத்தினராலோ பொலிஸாராலோ தான் கடத்தப்பட்டதாக எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை எனவும் அவ்வாறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாருந்தால் அது அவர்களின் சொந்த கற்பனையே எனவும் லத்தீஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாவீரர் தினத்தன்று இரவு கைதடியில் உள்ள தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த லத்தீஸ் திடீரென காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை இரவு வீடு திரும்பினார். யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஒழுங்களை மேற்கொண்டமைக்காக இவர் பாதுகாப்புத் தரப்பினரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவ்வாறான நிலையில் தான் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள லத்தீஸ், யார் கடத்தினார்கள் என்றுத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

2 Responses to ஊடகங்கள் பொய் சொல்கிறதாம்! -யாழில் கடத்தப்பட்ட மாணவன்!!

  1. . சிங்களப் பேய்களின் அடாவடி ஆட்சியில் உண்மை சொல்பவன் அடுத்தநாளே அனாதைப் பிணமாக
    தெருவில் வீசப்படுவான், அல்லது காணாமல் போய்விடுவான். பாவம் அந்த மாணவன் உயிரோடு திரும்பி
    வந்ததே ஆச்சரியமான அதிஸ்டம் . உண்மையைச் சொல்லி உயிர் துறக்கவேண்டுமா ? இழந்த உயிர்கள் போதும். பயப்பட வேண்டிய நேரத்தில் பயந்து ஒதுங்குவதும் ஒருவித இராஜதந்திரம்தான் .

     
  2. அழகான உண்மை அழகான சத்யம்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com