தான் இனி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரியும், பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது கணவர் திருக்குமரன் நடேசனுடமும், குழந்தைகளுடனும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தார் நிருபமா. அப்போது நாம் தமிழர் மற்றும் மதிமுக உறுப்பினர்கள் சிலர் இராமேஸ்வரம் கோவிக்குள் அவர்கள் செல்ல கூடாது என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில் தனது குடும்பத்தினர் சகிதம் ராமேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற போது தனக்கெதிராக வி.புலிகளின் ஆதரவாளர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து தான் இனி இந்தியாவுக்கு அரசு முறை பயணமாகவோ, தனிப்பட்ட பயணமாகவோ செல்ல போவதில்லை என முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 வருடங்களாக தான் இந்தியாவுக்கு சென்று வருவதாகவும், எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் தமக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் ராஜபக்சவிற்கு எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



0 Responses to 'இனி இந்தியாவுக்கு செல்ல போவதே இல்லை' - ராஜபக்சவின் சகோதரி