Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பொருளாதார தடைகளை பிரயோகித்தால் அது இலங்கையையும் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கை எண்ணெய் இறக்குமதியில் ஈரானை பெரிதும் நம்பியிருப்பதனால் இந்த நெருக்கடி நிலை ஏற்படக் கூடுமென ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுத்திகரிக்கப்படும் மசகு எண்ணெய்க்கு ஈரானின் மசகு எண்ணெயையே இலங்கை நம்பியிருக்கின்றது. ஈரானின் அதிகளவு சல்பர் செறிந்த கனமான மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வகையிலேயே சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருவதால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா, ரஷ்யாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது.

அதேவேளை, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டால் அமெரிக்கா இலங்கைக்கு சில சலுகைகளை வழங்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகையதொரு பின்னணியில் அமெரிக்காவின் சலுகைகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.

0 Responses to ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் இலங்கையையும் பாதிக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com